ADDED : மார் 03, 2026 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றியை கொல்ல அனுமதி இல்லாததால், சட்டவிரோதமாக விளை நிலங்களில் மின் வேலி அமைத்து, மனித உயிரிழப்பு நிகழ்கிறது.
கேரளத்தில் காட்டுப்பன்றியை கொல்ல, விவசாயிகளுக்கு அனுமதி உள்ளது. அதுபோல, வனவிலங்கு பட்டியலில் உள்ள காட்டுப்பன்றியை கொல்ல, மத்திய அரசிடம் விண்ணப்பித்து, சிறப்பு அனுமதியை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.
- ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,

