உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 22, 2026 01:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில், காட்டுத்தீ ஏற்படுகிறது என்பதை, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் கண்காணித்து வருகிறது.
காட்டுத்தீ தொடர்பாக, செயற்கை கோள் வாயிலாக கிடைக்கும் விபரங்களை, இந்நிறுவனம் அந்தந்த மாநில வனத்துறைக்கு அனுப்புகிறது.
அந்த வகையில், இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், தமிழக வனத்துறைக்கு நேற்று அனுப்பிய தகவலில், தேனி, திருப்பூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 17 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தில் களப் பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டு, காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டதாக, தமிழக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
