தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உயர்கல்வி உதவித்தொகைக்கு மாணவர்களை அலைக்கழிப்பதா? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

உயர்கல்வி உதவித்தொகைக்கு மாணவர்களை அலைக்கழிப்பதா? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

உயர்கல்வி உதவித்தொகைக்கு மாணவர்களை அலைக்கழிப்பதா? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

3


UPDATED : நவ 13, 2026 11:56 AM

ADDED : நவ 13, 2026 10:46 AM

Follow on GoogleFavourite on Google

3

UPDATED : நவ 13, 2026 11:56 AM ADDED : நவ 13, 2026 10:46 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: உயர்கல்வி உதவித்தொகைக்கு மாணவர்களை அலைக்கழிப்பதா? என தவெக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?

இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?

இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? திராவிட மாடல் அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் தவெக அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காண முடியவில்லையே. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரத்யேக வீடியோ!

முதல்வர் விஜய் கேக் வழங்கிய தருணம்; ஸ்டாலின் கையில் எடுத்த மாணவர் பிரச்னை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us