தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சந்தேகங்களுக்கு முதல்வர் பதில் தருவாரா?: இது உங்கள் இடம்

சந்தேகங்களுக்கு முதல்வர் பதில் தருவாரா?: இது உங்கள் இடம்

சந்தேகங்களுக்கு முதல்வர் பதில் தருவாரா?: இது உங்கள் இடம்


ADDED : ஜன 14, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2024 01:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்



எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பொதுவாக அரசியல்வாதிகள், நீதிமன்ற தீர்ப்புகளோ, தேர்தல் முடிவுகளோ தங்களுக்கு சாதகமாக வந்தால், 'நீதி வென்றது' என்றும், பாதகமாக வந்தால், நீதிபதியை விமர்சிப்பதுடன், தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சுமத்துவர்.

சமீபத்தில், 'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.

அதுபோல சமீபத்தில், குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, 'சகோதரி பில்கிஸ் பானு வழக்கில், நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது; நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக அமைந்திருக்கிறது. அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது' என்று கூறி இருக்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், பாராட்டியும் பேசியிருக்கிறார்.

தமிழக முதல்வருக்கு சில கேள்விகள்...

 நீங்கள் பாராட்டிய அதே உச்ச நீதிமன்றம் தான், 'நாடு முழுதும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு கட்டாயம்' என்று வழங்கிய தீர்ப்பு, மருத்துவக் கல்லுாரிகளில் நன்கொடை என்ற பெயரில் நடக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தி, நடுத்தர, ஏழை மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக அமைந்தது. ஆனால், அதற்கு எதிராக சட்டசபையில் நீங்கள் தீர்மானம் இயற்றியது ஏன்?

 'அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்கை, அமலாக்கத்துறை விரைவில் விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்ததும், அதே உச்ச நீதிமன்றம் தான். அப்படியெனில், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர செய்வதும், அவரது ஜாமினுக்காக போராடுவதும் ஏன்?

 மற்றொரு அமைச்சரான பொன்முடிக்கு, சிறை தண்டனை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அவரை காப்பாற்ற நினைப்பது ஏன்?

 ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று, கடந்த 2022 -நவம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பாராட்டும் நீங்கள், உயர் நீதிமன்ற தீர்ப்பை மட்டும் ஏற்காதது ஏன்?

இந்த சந்தேகங்களுக்கு முதல்வர் பதில் தருவாரா?



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us