ADDED : நவ 05, 2024 10:03 AM

சென்னை: விஜய்க்கு வந்த கூட்டத்தை வைத்து கணக்கு போடக்கூடாது என்றும், நயன்தாராவுக்கு கூட 4 லட்சம் பேர் கூடினர் என்றும் சீமான் கூறியது, பேசுபொருளாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: சேலத்தில் நகைக்கடை திறக்க வந்த நயன்தாராவுக்கு, 4 லட்சம் பேர் கூடினர். விஜயகாந்திற்கு மதுரையில் கூடாத கூட்டமா, விஜய்க்கு கூடி விட்டது? எனக்கு, 36 லட்சம் பேர் ஓட்டளித்து உள்ளனர்.
அந்த 36 லட்சம் பேரும் என் கூட்டம். இதை என்னால் அடித்துக் கூற முடியும். ஆனால், மாநாட்டுக்கு வந்தோர் எல்லாம் என் ஆதரவாளர்கள், ரசிகர்கள் என, விஜயால் கூற முடியுமா? இவ்வாறு சீமான் தெரிவித்திருந்தார்.
டவுட் தனபாலு கமென்ட்: விஜய்க்கு சவால் விடுவது இருக்கட்டும்... உங்க கூட்டத்துல, 36 லட்சம் பேர் இருக்காங்கன்னு சொல்றீங்களே...நீங்களும் ஒரு மாநாடு நடத்துங்க...அதுல, 36 லட்சம் பேர் கூட வேண்டாம்... அதுல, 10ல ஒரு பங்கு கூட்டமாவது திரண்டால்,'டவுட்'டே இல்லாம உங்க வாதத்தை ஏத்துக்கலாம்!
-நமது நிருபர்-

