ADDED : டிச 19, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டப்படி உத்தரவு பெற்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என, சட்டப் போராட்டம் நடத்தும் தருணத்தில், தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார், மதுரையைச் சேர்ந்த பூர்ணசந்திரன். இந்த மரணம் வேதனையை தருகிறது; மனம் வலிக்கிறது. பூர்ணசந்திரன் குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு, ஹிந்து சமுதாயத்துக்கு உள்ளது. இனி இது போன்று நடக்கக்கூடாது. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என காத்திருக்கிறோம். பூர்ணசந்திரன் போன்றோரின் ஹிந்து உணர்வே, அனைத்து ஹிந்துக்களின் உணர்வு. அதை இனியாவது அரசு புரிந்து கொண்டு, அதற்கேற்ப செவி சாய்க்க வேண்டும்.
- ராம ரவிகுமார்,
தலைவர்,
ஹிந்து தமிழர் கட்சி

