ADDED : டிச 31, 2025 07:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்கள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்பது, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி.
உரிய காலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றா ததால், போராட்டத்திற்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, காவல் துறையை கொண்டு அடக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.
சமீபத்தில், ஏழு நாட்களாக செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, காவல் துறையின் அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. காவல் துறை, வருவாய்த் துறை, அரசு அதிகாரிகளில் ஒரு பிரிவினர் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக இருப்பரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
- சண்முகம் மாநில செயலர், மா-.கம்யூ.,

