ADDED : ஏப் 15, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே, வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில் வழித்தடமான, விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே, ரயில் தேவை அதிகமாக இருக்கிறது.
எனவே, இந்த தடத்தில் வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் என, மூன்று நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்க வேண்டும் என்றும், ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம், விரைவில் சிறப்பு ரயில்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.