ADDED : ஜன 22, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை தென் மாவட்டங்களில், குளிர்கால மழை துவங்கிஉள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த, 14ம் தேதி முடிவுக்கு வந்தது. இதன்பின், குளிர்கால மழை துவங்கியது.
நேற்று முன்தினம் தென் மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, காயல்பட்டினத்தில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்யும். பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை நேர பனிமூட்டம் தொடரும்.
சென்னையில் அதிகபட்சம், 31 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை பதிவாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.