உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 22, 2026 01:33 AM

அ நிறம் | அளவு
மல்லுார்: சேலம் அருகே, 17 வயது இளம்பெண்ணுடன் வரம்பு மீறி பழகியதாக, அண்ணன் உறவு முறை கொண்ட நவீன், 22, 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், மல்லுாரைச் சேர்ந்த, 17 வயது இளம்பெண், கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு, அதேபகுதியைச் சேர்ந்த அண்ணன் உறவு முறை கொண்டவர் நவீன்; அரசு டவுன் பஸ்சில் தற்காலிக டிரைவர். இவரது மனைவி பிரசவத்துக்கு, தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், 17 வயது இளம்பெண்ணுடன், வரம்பு மீறி பழகியுள்ளார் நவீன். இதை, அந்த பெண்ணும், அவரின் பெற்றோரும் கண்டித்துள்ளனர்.
ஆனாலும், நவீன், 'தன்னிடம், தொடர்ந்து பழக வேண்டும்' என, மாணவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
புகாரில், மல்லுார் மகளிர் போலீசார், போக்சோவில், நவீனை நேற்று கைது செய்தனர்.
