முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் 'இண்டி' கூட்டணியே இல்லை; சீமான்
முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் 'இண்டி' கூட்டணியே இல்லை; சீமான்
ADDED : பிப் 18, 2026 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: 'இண்டி' கூட்டணி வலிமையாக இருக்க முக்கிய காரணம் ஸ்டாலின் தான். அவர் இல்லை என்றால், இண்டி கூட்டணியே இல்லை என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது. 'இண்டி' கூட்டணி வலிமையாக இருக்க முக்கிய காரணம் ஸ்டாலின் தான். அவர் இல்லை என்றால், இண்டி கூட்டணியே இல்லை.
அதனால் தான், மூத்த காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலினுக்கு 'சப்போர்ட்' செய்கின்றனர். தமிழகத்தில் 10.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் கடன் தான் வளர்ந்துள்ளது; வேறு எந்த வளர்ச்சியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

