தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பெண் தலைமை காவலர் பலி: நிவாரண நிதி அறிவிப்பு

 பெண் தலைமை காவலர் பலி: நிவாரண நிதி அறிவிப்பு

 பெண் தலைமை காவலர் பலி: நிவாரண நிதி அறிவிப்பு


ADDED : செப் 30, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தவறி விழுந்து இறந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்திற்கு, 30 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

அவரது அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனுார் போலீஸ் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கண்ணகி, 34.

இவர், பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு இருந்த, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

தகராறில் ஈடுபட்டு தப்பி ஓடிய நபரை துரத்தி சென்றபோது, தவறி விழுந்து கண்ணகி மயங்கினார்.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது குடும்பத்திற்கு, 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us