ADDED : ஜன 16, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த தாவித் மனைவி ஜான்சிராணி 49. தனது வீட்டின் அருகே உள்ள அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் இயந்திரத்தில் உமியை கீழே தள்ளுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தில் ஜான்சிராணியின் தலை முடி சிக்கியதில் இழுபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.