ADDED : பிப் 08, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: இன்று ஒருநாள் காலை மட்டும், திருச்சி மணப்பாறையில், நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள்; வேலுாரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து, ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட அவலம்; சேலத்தில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்; திருப்பத்துாரில் வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை என, பெண்களுக்கு எதிரான குற்றச்செய்திகள் வரிசையாக வருகின்றன.
எங்கு செல்கிறது தமிழகம்? பெரியவர்கள் முதல் சிறுகுழந்தைகள் வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. இது, உங்களுக்கு உறுத்தவில்லையா முதல்வர் ஸ்டாலின்?