sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'

/

 மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'

 மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'

 மகளிருக்கு ரூ.5,000 வழங்கி கூட்டணி கட்சிகளுக்கு 'செக்'

17


ADDED : பிப் 14, 2026 04:05 AM

Google News

17

ADDED : பிப் 14, 2026 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூட்டணி கட்சிகளின், 'சீட்' பேரத்தை குறைக்க, மகளிர் உரிமைத் தொகை பெறும், 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில், தலா, 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு வரவு வைத்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும், 2021 சட்டசபை தேர்தலின் போது, ஒதுக்கிய அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை, வரும் தேர்தலுக்கும் ஒதுக்க, தி.மு.க., திட்ட மிட்டுள்ளது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு கேட்டு, தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.

அதை பின்பற்றி, வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கின்றன. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மகளிர் உரிமைத் தொகை பெறும், 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில், தலா, 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு செலுத்தி உள்ளது. இது, வரும் தேர்தலில், வெற்றிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என, தி.மு.க., கருதுகிறது.

எனவே, கூடுதல் தொகுதிகளை கேட்காமல், எங்களுடன் கூட்டணியில் தொடர்ந்தால், போட்டியிடும் தொகுதிகளில் முழு வெற்றி கிடைக்கும் எனக் கூறி, கூட்டணி கட்சியினரின் 'சீட்' பேரத்தை குறைக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us