ADDED : ஜூலை 15, 2026 07:01 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை பின்தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட த.வெ.க., ஒன்றிய செயலர் ரமேஷை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது, காவல்துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜயின், நிர்வாகத் திறனையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
'த.வெ.க.,காரன்' என்ற அடைமொழி, குற்றங்கள் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறி வருகிறதா. உள்ளூர் த.வெ.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அஞ்சுகிறதா. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்கிறது?
இதற்கான பதிலை முதல்வர் தேடினாலே, அவரது ஆட்சியின் லட்சணம் தெரிந்து விடும். முதல்வர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளை, கட்டுக்குள் வைத்திருப்பதோடு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
