ADDED : டிச 19, 2025 06:11 AM

சென்னை: தமிழகத்தில், பிரதமரின் 'உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணியை, எண்ணெய் நிறுவனங்கள் துவங்கி உள்ளன.
மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 2016 மே மாதம் துவங்கியது. இந்த திட்டத்தில், தமிழகத்தில் ஏற்கனவே 40 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடு முழுதும், பிரதமர் திட்டத்தில் கூடுதலாக 25 லட்சம் புதிய இலவச காஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக, மத்திய அரசு கடந்த அக்டோபரில் அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தில் ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் துவங்கி உள்ளன.
இலவச காஸ் இணைப்பு பெற விரும்பும் ஏழை பெண்கள், 'ஆதார்' எண், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன், வீடுகளுக்கு அருகில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் காஸ் ஏஜன்சிகளை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

