9 கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.32.50 கோடியில் பணிகள் துவக்கி வைப்பு
9 கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.32.50 கோடியில் பணிகள் துவக்கி வைப்பு
UPDATED : ஆக 23, 2025 10:21 AM
ADDED : ஆக 23, 2025 01:37 AM

சென்னை: மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒன்பது கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார் நாச்சியார் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ஆகியவற்றில், 124 கோடி ரூபாய் மதிப்பில் 17 பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மதுரை திருமோகூர் காளமேகபெருமாள் கோவில், 2.81 கோடி; விருதுநகர் கல்விமடை திருநாகேஸ்வரமுடையார் கோவில், 2.10 கோடி, திருவண்ணாமலை புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் கோவில், 1.56 கோடி.
கிருஷ்ணகிரி அத்திமுகம் ஜராவதீஸ்வரர் கோவில், 1.31 கோடி; மதுரை, சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில், 1.52 கோடி ரூபாய் உட்பட மொத்தம் ஒன்பது கோவில்களை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள், 32.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னை மாதவரம் கைலாசநாதர் கோவில்.
கோவை, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உட்பட 14 கோவில்களில், 51.1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, தலைமைச் செயலர் முருகானந்தம், ஹிந்து அறநிலையத்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.