தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தூங்காமல் விழிப்புடன் பணியாற்றுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு

தூங்காமல் விழிப்புடன் பணியாற்றுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு

தூங்காமல் விழிப்புடன் பணியாற்றுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் உத்தரவு


UPDATED : அக் 15, 2024 11:39 PM

ADDED : அக் 15, 2024 11:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2024 11:39 PM ADDED : அக் 15, 2024 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் நள்ளிரவு கனமழை வாய்ப்புள்ளதால், தி.மு.க,வினர் தூங்காமல் விழிப்புடன் பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் நள்ளிரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தி வெளியிட்டார்.

இதையடுத்து மழைபாதிப்பு மீட்புபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். பின் வெளியிட்ட அறிவிப்பு, சென்னையில் நள்ளிரவு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தி.மு.க.,வினர் ஒவ்வொரு பகுதியிலும் இரவு முழுக்க விழிப்புடன் இருந்து மழை பாதிப்பை கண்காணிக்க வேண்டும்.

அண்ணா அறிவாலய வார் ரூம் எண் 8069446900 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றிரவு தூங்காமல் விழிப்புடன் இருந்து மக்களுடன் தேவைப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றிட . உதவவேண்டும். மக்கள் கூறும் உதவிகள் , நிவாரண பணிகளை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தி.மு.க., ஐ.டி., விங்க் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us