உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 18, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மேகநாதன், 32.
இவரது வீட்டில் மின் இணைப்புக்கான ஒயர், மின்கம்பத்திலிருந்து நேற்று காலை அறுந்து கீழே விழுந்தது. இதை அவர் வளர்த்து வந்த ஆடு மிதித்ததில், அதன் மீது மின்சாரம் தாக்கியது. அந்த ஆட்டை காப்பாற்ற மேகநாதன் முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே மேகநாதன் பலியானார். கந்திலி போலீசார் விசாரிக்கின்றனர்.
