sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழிலாளி பலி: போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்

/

தொழிலாளி பலி: போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்

தொழிலாளி பலி: போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்

தொழிலாளி பலி: போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதல்

1


ADDED : செப் 03, 2025 02:35 AM

Google News

ADDED : செப் 03, 2025 02:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:குடியிருப்பில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளி, தவறி விழுந்து இறந்ததால், இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசார், தடியடி நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில், 'எல்அன்டி' கப்பல் கட்டும் நிறுவனம், தனியார் கன்டெய்னர் கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

வாக்குவாதம் இவற்றில் ஒடிஷா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்குவதற்கு அதே பகுதியில், இரும்பு தளவாடங்களை கொண்டு, தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமரேஷ், பிரசாத், 35, என்பவர் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து தன், குடியிருப்பில் முதல் தளத்தில் படுத்து இருந்த அமரேஷ் பிரசாத், தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.

தொடர்ந்து காட்டூர் போலீசார் குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை விசாரணைக்கு சென்ற போது, அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி, 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பேச்சு நடத்த முயன்றபோது போராட்டக்காரர்களள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி உட்பட 10க்கும் மேற் பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார், கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 50 பேரை போலீசார், வேனில் அழைத்து சென்றனர். இந்நிலையில் தொழிற்சாலையின் ஒப்பந்த நிறுவனம் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ௫ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us