ADDED : ஜன 28, 2025 01:27 PM

கோவை: கோவையில் மூடப்பட்ட போக்கஸ் எஜுமேட்டிக் நிறுவனத்தின் ஊழியர்கள், இன்று தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன் திரண்டனர். புகாரை விசாரித்த தொழிலாளர் துறையினர், 'விரைவில் சுமுக தீர்வு எட்டப்படும்' என்று தெரிவித்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள், பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று மூடப்பட்டது.
கோவை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர் ராஜ்குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்க தரப்பில் சி.ஐ.டி.யு., சங்கத்திலிருந்து மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.
ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் உள்ள போக்கஸ் ரெஜிமேட்டிக் நிறுவன இயக்குனர்களுடன் அவர் பேசினார். 'விரைவில் சமூகமான முடிவு எட்டப்படும்' என்று தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் கூறினார்.