சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு
சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு
UPDATED : டிச 16, 2024 11:44 AM
ADDED : டிச 16, 2024 11:31 AM

சென்னை: சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சென்னை கலைவாணர் அங்கத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு நாளை (டிச.,17) பாராட்டு விழா நடைபெற உள்ளது. தமிழக அரசு தரப்பில், குகேஷக்கு ரூ.5 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகிழ்ச்சி
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு குகேஷ் அளித்த பேட்டி: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி. டிங் லிரேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு செல்ல, சென்னை செஸ் ஒலிம்பியாட் உதவியது. கோப்பையை வீட்டிற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி. அனைவரின் ஊக்கமும், எனக்கு புத்துணர்ச்சியை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.