மதுரையில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி; முதல் சுற்று லீக் போட்டியில் ஜெர்மனி வெற்றி
மதுரையில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி; முதல் சுற்று லீக் போட்டியில் ஜெர்மனி வெற்றி
ADDED : நவ 28, 2025 01:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று லீக் போட்டியில், ஜெர்மனி வெற்றி பெற்றது.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (நவ.,28) உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடங்கி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து உட்பட 12 நாடுகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சுற்று போட்டியில் ஜெர்மனி 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில் அயர்லாந்து அணி 4- 3 என்றபோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது.

