ADDED : ஆக 25, 2026 12:34 AM
அமைச்சர் ராஜ்மோகன் மேலும் கூறியதாவது:
மாணவர்களின் புத்தக சுமை குறைக்கப்படும். சரியாக படிக்காத மாணவர்களை, 'தன் வேகத்தில் கற்றுக் கொள்ளும் மாணவர்' என, அழைக்க வேண்டும். அதேபோல, குற்றத்தில் ஈடுபடும் மாணவரை, குற்றவாளியாக பார்க்காமல், அச்சூழலில் பாதிக்கப்பட்டவராக கருத வேண்டும். ஆசிரியர்களுக்கு பல ஆண்டு பிரச்னைகள் உள்ளன. அவை பேசி தீர்வு காணப்படும்.
அதேபோல, 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து, 14,417 என்ற எண்ணில் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் விஜயின் பெருங்கனவாக, உலகத் தமிழர் மாநாடு உள்ளது. எனவே, விரைவில் உலகத் தமிழர் மாநாடு நடத்த, ஐவர் குழு அமைக்கப்படும். அரசின் திரைப்பட ஸ்டுடியோக்களில், திரைப்படங்கள் எடுப்பதற்கான கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
