உள்ளடக்கத்திற்கு செல்ல
மஞ்சள் பெட்டி: இரட்டை நிலைப்பாடு தி.மு.க.வுக்கு புதிதல்ல
மஞ்சள் பெட்டி: இரட்டை நிலைப்பாடு தி.மு.க.வுக்கு புதிதல்ல
ADDED : நவ 29, 2026 09:48 PM
அ நிறம் | அளவு
தொகுதி மறு வரையறை அறிவிப்பு வந்த நாளில், அ.தி.மு.க., மிகத் தெளிவாக தன் நிலைப்பாட்டை எடுத்தது.
தமிழகத்தின் லோக்சபா உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம், 7.18 சதவீதம். இது, மாறாமல் இருக்க வேண்டும் என்பதே, அ.தி.மு.க.,வின் முடிவு.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை, 31ஆக குறையும் என்று பிரசாரம் செய்து, மக்களை துாண்டி விட்டு ரசித்தது.
தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சிகள் கழட்டி விட்டதால், இன்று, தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு வெற்றி என, தி.மு.க., அறிக்கை விட்டுள்ளது.
தற்போது, கூட்டணி அமைக்க, டில்லியில் தவம் கிடக்கின்றனர். இரட்டை நாக்கு, இரட்டை நிலைப்பாடு, தி.மு.க.,விற்கு புதிதல்ல.
– கோவை சத்யன்
தேசிய செய்தி தொடர்பாளர்,
அ.தி.மு.க.,
