மஞ்சள் பேட்டி 'கூடுதல் கட்டணம் அரசு கஜானாவுக்கு செல்கிறதா?'
மஞ்சள் பேட்டி 'கூடுதல் கட்டணம் அரசு கஜானாவுக்கு செல்கிறதா?'
ADDED : ஜன 18, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் யாரிடமும் கலந்தாலோசிக்காமல், சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி, 2023 மார்ச்சில் தி.மு.க., அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. உரிய நடைமுறைகளை பின்பற்றி புதிய வழிகாட்டி மதிப்பை அறிவிக்கும் வரை, 2017ல் அமலில் இருந்து வரும் வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், தொடர்ந்து கூடுதல் கட்டணத்தையே வசூலித்து வருகிறது. இது, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் உண்மையில் அரசு கஜனாவுக்கு தான் செல்கிறதா என்பதில்பலத்த சந்தேகம் எழுகிறது.
அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்