UPDATED : அக் 17, 2026 05:20 PM
ADDED : அக் 17, 2026 05:16 PM
நிர்வாக திறனில் த.வெ.க., அரசு பூஜ்யம். ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குவதில் இருந்தே இவர்களது நிர்வாக திறமையின்மை தெரிகிறதே.
த.வெ.க., நிர்வாகியிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தன் கட்சி நிர்வாகி என்பதால் த.வெ.க., அரசு, அவரை முதலில் விட்டுவிட்டது. மத்திய புலனாய்வுத்துறை விசாரணையில் தான் இந்த விஷயம் வெளிவந்துள்ளது. இது ஒரு சாம்பிள் மட்டுமே.
அ.தி.மு.க.,வை இழிவாக பேசுவதை முதல்வர் விஜய் நிறுத்தி கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆரின் தொண்டர்களை அழைக்க, த.வெ.க.,வுக்கு தகுதி இல்லை. மார்க்கெட்டில் விலை போகாத த.வெ.க.,வை, அ.தி.மு.க., வாயிலாக வளர்க்க முயற்சிக்கின்றனர்.
நடிகர் யோகி பாபு வந்தால் கூட, விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட அதிகமாக வரும்.
அ.தி.மு.க., ஆலமரத்தில், உதிரும் சில இலைகளை பற்றி கவலையில்லை.
– செல்லுார் ராஜூ
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
