ADDED : அக் 11, 2024 11:30 PM
சென்னை:'முத்தமிழறிஞர் கலைஞர் விருது' பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழுக்கு தொண்டாற்றும் அறிஞர் ஒருவருக்கு, 'முத்தமிழறிஞர் கலைஞர் விருது' வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவ்விருது பெறும் அறிஞருக்கு, 10 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை, தகுதியுரை வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் பல்வேறு விருதுகளுடன், இவ்விருதும் வழங்கப்படும். இவ்விருது பெற, தமிழுக்கு தொண்டு ஆற்றியவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அவற்றை பூர்த்தி செய்து, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரிக்கு, தபாலில் வரும் 30ம் தேதிக்குள், தக்க ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.