ADDED : நவ 30, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அரசு பள்ளி மாணவர்களிடம் உயர்கல்வி குறித்த ஆர்வத்தை வளர்க்க 10ம் வகுப்பு படிக்கும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் கல்வியாண்டிற்கு 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதியானவர்களை தேர்வு செய்ய, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முதல்வர் திறனறி தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி 25ல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் டிச., 9ம் தேதி வரை, 'www.dge.tn.gov.in' என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.