ADDED : அக் 16, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்கள், நவம்பர் மாத அரிசியை இம்மாதமே பெறலாம்' என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு, அரிசி கார்டுதாரர்கள் பயனடையும் வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் நவ., மாதத்திற்கு உரிய அரிசியை மட்டும் இம்மாதமே பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, இம்மாத ஒதுக்கீடான அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும், இதுவரை பெறாதவர்களும், நவ., மாதத்திற்கான ஒதுக்கீட்டை, இம்மாதத்திலேயே சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்த மாத அரிசியை, இம்மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பரில் தங்களுக்கு உரிய அரிசியை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.