நீங்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது; மத்திய பல்கலையில் சிபிஆர் பேச்சு
நீங்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது; மத்திய பல்கலையில் சிபிஆர் பேச்சு
ADDED : ஆக 17, 2026 02:04 PM

திருவாரூர்: பட்டம் பெற்ற பிறகும் கூட நீங்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி துணை ஜனாதிபதி சிபிஆர் பேசியதாவது: தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய தினம் இப்பல்கலைக்கழகத்தின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லாகும். இன்றைய காலகட்டத்தில் கல்வியை வெறும் தேர்வுகள் அல்லது மதிப்பெண்களைக் கொண்டு மட்டும் அளவிட முடியாது.
சுயமாகச் சிந்திக்கும் திறன், இணைந்து பணியாற்றும் திறன் மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டே கல்வியை அளவிட வேண்டும். பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்றல் ஆகியவற்றிற்கு தமிழக மத்திய பல்கலைக்கழகம் முக்கியத்துவம் அளிக்கிறது.
இன்று பட்டம் பெறவிருக்கும் ஒவ்வொரு பட்டதாரிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தச் சாதனை உங்களுடையது மட்டுமல்ல. உங்கள் நலனுக்காகவே எப்போதும் உழைத்த, மற்றும் நீங்கள் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று எப்போதும் விரும்பி பிரார்த்திக்கும் உங்கள் பெற்றோருடையதுமாகும். பட்டம் பெற்ற பிறகும் கூட நீங்கள் கற்றலை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் உரை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
