ADDED : ஜன 18, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் அருகே வடக்கு புளியம்பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி மகன் சேதுபதி, 30. நேற்று மாலை நண்பருடன் டூ - வீலரில் வடக்கு அச்சம்பட்டி நோக்கி சென்றார்.
அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த மூன்று பேர், சேதுபதியுடன் டூ - வீலரில் வந்த நபரை மிரட்டி விரட்டினர்.
பின்னர் சேதுபதியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து தப்பினர். தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.