உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 04, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி எஸ்.ஐ., மோகனசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று (நவ.,3) சூளகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர்.
இதில் அவர், சூளகிரியை சேர்ந்த அப்துல் வாஜித், 20, என்பதும், அவரது பையில், 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 2.5 கிராம் ‘மெத்ஆம்பெட்டமைன்’ எனும் போதை பவுடர் இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ஓசூர், காமராஜ் காலனியை சேர்ந்த சுகைல், 28, என்பவரிடம், போதை பவுடரை வாங்கியதாக அவர் கூறியுள்ளார். போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
