ADDED : ஜன 14, 2025 01:20 AM

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே காரங்காட்டைச் சேர்ந்தவர் ஷாஜின் 24. கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2021-ல் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் மாணவி உடை மாற்றுவது உள்ளிட்டவற்றை அலைபேசியில் படம் பிடித்துள்ளார். பின்னர் அந்த படங்களை காட்டி இரண்டு லட்ச ரூபாய் பணம் கேட்டும், பணம் தராத பட்சத்தில் வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
பணம் கொடுக்காததால் மாணவி உடை மாற்றும் படங்களை இணைய தளங்களில் வெளியிட்டுள்ளார். இது பற்றி மாணவியின் பெற்றோர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஷாஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இந்த மாணவி கல்லூரியில் படித்து வருகிறார்.

