ஆசிரியரிடம் ரூ. 1.47 லட்சம் மோசடி கடலுாரில் வாலிபர் கைது
ஆசிரியரிடம் ரூ. 1.47 லட்சம் மோசடி கடலுாரில் வாலிபர் கைது
ADDED : அக் 10, 2025 03:55 AM

கடலுார்: கடலுாரில், அரசு பள்ளி ஆசிரியரிடம் குறைந்த விலைக்கு கார் விற்பதாக கூறி, ரூ.1.47 லட்சம் மோசடி செய்த நாகப்பட்டினம் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், செம்மண்டலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர், கடந்த மாதம் 4ம் தேதி, தனது முகநுால் பக்கத்தில் வந்த டெல்லிகார்ஸ் விளம்பரத்தில் குறைந்த விலைக்கு கார் விற்பனைக்கு உள்ளதை பார்த்துள்ளார்.
அதில் இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது, ரமேஷ் என்பவர் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாருதி கார் விற்பனைக்கு இருப்பதாக கூறினார்.
இதனை நம்பி 6 தவணைகளாக அவருக்கு முன்பணமாக ஜிபே மூலமாக, ஆசிரியர் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.
ஆனால், பணம் பெற்ற ரமேஷ், கார் தராமல் மோசடி செய்தார்.
இதுகுறித்து ஆசிரியர் கடலுார் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, பெங்களூருவில் பதுங்கியிருந்த ரமேைஷ, 33; பிடித்து விசாரணை நடத்தியதில், பணம் மோசடி செய்ததும், சொந்த ஊர், நாகப்பட்டினம் என்பதும் தெரிந்தது.
உடன், அவரை போலீசார் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
முகநுால், இன்ஸ்டாகிராமில் வரும் போலி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என, எஸ்.பி., ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.