ADDED : நவ 17, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, வதிஷ்டபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்ற, வதிஷ்டபுரம், காலனியைச் சேர்ந்த அரசன் மகன் ராதாகிருஷ்ணன், 28, என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
போலீசார் வழக்கு பதிந்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.