உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 26, 2026 09:22 PM
ADDED : நவ 26, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி:
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் கோவில் பகுதியை சுற்றி, எட்டு பைக்குகள் திருடிய நாகராஜா, 28, என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்துார் கோவிலை சுற்றி, பக்தர்கள் நிறுத்தும் பைக்குகள் அடிக்கடி திருடு போயின. இதுதொடர்பாக, அந்த பகுதிகளில் உள்ள ‘சி.சி.டி.வி’ கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் அடிப்படையில், தேரியூரைச் சேர்ந்த நாகராஜா என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்ததில், அடுத்தடுத்து, எட்டு பைக்குகளை அவர் திருடியது தெரியவந்தது. நாகராஜாவை கைது செய்த போலீசார், எட்டு பைக்குகளை மீட்டனர்.
