சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தர்ம அடி
ADDED : டிச 23, 2024 08:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி தாய், தந்தை, சகோதரிகளுடன் வசிக்கிறார். நேற்று இரவு அவர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, மாலைமேடு புதுார் பகுதியை சேர்ந்த மனோஜ், 30, சிறுமியின் வாயை பொத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமியை காணாமல் குடும்பத்தினர் தேடியபோது, மனோஜ் காட்டுப்பகுதியில் சிறுமியை மிரட்டியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அங்கிருந்து தப்ப முயன்ற மனோஜை அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். மனோஜை போக்சோவில் கைது செய்து சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மனோஜ் மீது ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கனவே உள்ளது.