யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு: ஐகோர்ட் கருத்து
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு: ஐகோர்ட் கருத்து
UPDATED : ஆக 06, 2024 09:38 PM
ADDED : ஆக 06, 2024 05:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு. அவரது பேச்சுக்கு தண்டனை பெற்றுத் தரலாம். ஆங்கிலேயர் கால தடுப்பு காவல் சட்டத்தை பயன்படுத்தின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக்கூறினார்.