தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/கவுரவம்!: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் நடந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

கவுரவம்!: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் நடந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

கவுரவம்!: அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் நடந்த விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு


UPDATED : செப் 05, 2016 01:17 AM

ADDED : செப் 04, 2016 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2016 01:17 AM ADDED : செப் 04, 2016 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிகன்:தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே தொண்டாற்றி, இறப்புக்கு பிறகும் அற்புதங்கள் படைத்த அன்னை தெரசாவுக்கு, வாடிகனில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் வழங்கி, போப் பிரான்சிஸ் கவுரவித்தார்.

@Image@இந்த விழாவில், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா

@nextcolumn@ பானர்ஜி உட்பட, லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், 1910ல் பிறந்த தெரசா, 1929ல் இந்தியாவுக்கு வந்தார். தொழுநோய், காசநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேவை செய்ய

துவங்கினார். 'மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்' என்ற அமைப்பை உருவாக்கி, தன் இறுதி மூச்சு வரை சேவை செய்து வந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு, பாரத் ரத்னா உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற அன்னை தெரசா, மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில், 1997ல் காலமானார். 2003ல்,

அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால்,தெரசாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கி

@nextcolumn@ கவுரவித்தார். தன் மறைவுக்குப் பின், இரண்டு அற்புதங்களை செய்பவர்களுக்கு புனிதர் பட்டத்தை போப் அளிப்பார். அதன்படி, 2002ல் மோனிகா பெஸ்ரா என்ற இந்திய பெண், அன்னை தெரசாவிடம் பிரார்த்தனை செய்ததை தொடர்ந்து, கர்ப்பப்பை புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாக கூறினார்.

அதேபோல, தெரசாவை வழிபட்டதால், தன் மூளையில் ஏற்பட்ட கட்டி நீங்கியதாக, பிரேசிலை சேர்ந்த மார்சிலோ ஹத்தாத் ஆன்ட்ரினோ என்பவர் கூறினார்.இந்த இரண்டு அற்புதங்களையும் ஏற்றுக் கொள்வதாகவும், அன்னைதெரசாவுக்கு புனிதர் பட்டம் அளிப்ப தாகவும் வாடிகன் அறிவித்தது. அதன் படி, வாடிகன் நகரில் நேற்று நடந்த கோலாகல விழாவில், அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கி கவுரவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தெரசாவின், 19வது நினைவு நாளுக்கு முந்தைய தினம், அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.



சுஷ்மா பங்கேற்பு

அன்னை தெரசாவுக்கு, புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில், இந்தியாவிலிருந்து மத்திய வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் அமைப்பைச் சேர்ந்த, 350 கன்னியாஸ்திரிகளும் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us