sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டேவிஸ் கோப்பை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

/

டேவிஸ் கோப்பை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

டேவிஸ் கோப்பை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்

டேவிஸ் கோப்பை: இந்திய வீரர்கள் ஏமாற்றம்


ADDED : செப் 17, 2011 01:13 AM

Google News

ADDED : செப் 17, 2011 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டோக்கியோ :டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின், உலக சுற்றுக்கான தகுதிச் சுற்றின் ஒற்றையர் போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன், ரோகன் போபண்ணா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தோல்வி அடைந்து ஏமாற்றினர்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியா-ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக சுற்றுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஜப்பானின் யுசி சுகிதாவை எதிர்கொண்டார். இதில் அபாரமாக ஆடிய ஜப்பான் வீரர் சுகிதா 6-3, 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் கெய் நிஷிகோரியை சந்தித்தார். இதில் மோசமாக ஆடிய போபண்ணா 3-6, 2-6, 2-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஜப்பான் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இன்று நடக்கவுள்ள இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, விஷ்ணு வர்தன் ஜோடி, ஜப்பானின் நிஷிகோரி-சோய்டா ஜோடியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய ஜோடி வெற்றி பெற்றால் மட்டுமே, உலக சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us