ADDED : செப் 15, 2011 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன் :அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அல்-குவைதா தலைவர் அல் ஜவாகிரி, இன்டர்நெட் மூலம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அரபு நாடுகளில் ஏற்பட்டு வரும் புரட்சி, அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை காட்டுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த இன்டர்நெட் செய்தி குறித்து ஆய்வு செய்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் தகவல் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் குறிப்பிடுகையில், ''அல் ஜவாகிரி எங்கு இருக்கிறார் என்ற சரியான தகவல் இல்லை. அனேகமாக அவர் பாகிஸ்தானில் தான் இருக்க வேண்டும்,'' என்றார்.