ADDED : மார் 16, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 5 நாள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இன்று இந்தியா வருகிறார்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, 5 நாள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், இன்று இந்தியா வருகிறார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வருகின்றனர். இந்த வருகையில் போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கிறார்.
மார்ச் 17 ஆம் தேதி புதுடில்லியில் நடைபெறும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
.