ADDED : செப் 21, 2011 06:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: 'பிபா' கால்பந்து ரேங்கிங் பட்டியலில், ஸ்பெயின் அணி மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.
சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, 'பிபா' இன்று வெளியிட்டது. இதில் உலக சாம்பியன் ஸ்பெயின் அணி (1605 புள்ளி), மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. இதன்மூலம் நெதர்லாந்து அணி (1571) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஜெர்மனி அணி (1290) மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. உருகுவே (4வது இடம்), போர்ச்சுகல் (5வது), இத்தாலி (6வது) அணிகள் தலா ஒரு இடம் முன்னேறின. பிரேசில் அணி, 6வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி, நான்கு இடங்கள் பின்தள்ளி 8வது இடம் பிடித்தது. இந்திய அணி, நான்கு இடங்கள் பின்தள்ளி 162வது இடம் பிடித்தது.