ADDED : ஆக 03, 2011 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: 'ஐ.நா., பாதுகாப்பு சபை தலைமைப் பொறுப்பேற்றுள்ள இந்தியாவிடம் உலக நாடுகள் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றன.
அந்த எதிர்பார்ப்புகளை இந்தியா நிறைவேற்றும்' என ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஐ.நா.,வின் நலன், பாதுகாப்பு சபையின் கவுரவம் இவற்றைக் கருத்தில் கொண்டு, அரசியல் பக்குவம் மற்றும் மேன்மையுடன் இந்தியா நடந்து கொள்ளும். பாதுகாப்பு சபையில் இந்தியா தலைமைக்கு வந்தவுடன், உலகின் பிற நாடுகள் மிக அதிகளவில் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கின்றன. அவற்றை இந்தியா நிறைவேற்றும். அதன் மூலம், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்குத் தகுதியானதுதான் என்று, இங்குள்ள உறுப்பினர்கள் சொல்லும்படியும் நடந்து கொள்ளும். இவ்வாறு புரி தெரிவித்தார்.