ADDED : அக் 04, 2011 12:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்:குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி 4 தமிழர்கள் பலியானார்கள்.
குவைத்தின் மினா அல் அகமதியில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லெட்சுமையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா சக்திவேல், ஜானகிராமன் அர்ஜூன் மற்றும் சிவசந்திரன் சண்முகம் ஆகிய நான்குபேர் பரிதாபமாக உயிரிழந்ததாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கேஸ் கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

