அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றுவோம்: உதவியை நிறுத்திய பிறகும் சொல்கிறது உக்ரைன்
அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றுவோம்: உதவியை நிறுத்திய பிறகும் சொல்கிறது உக்ரைன்
ADDED : மார் 04, 2025 08:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீவ்: உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த பிறகும், அந்நாட்டுடன் இணைந்து அமைதியான முறையில் பணியாற்றுவோம் என உக்ரைன் கூறியுள்ளது.
ரஷ்யா தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மைஹல் கூறியதாவது: அமைதியான முறையில் அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றுவோம். அமெரிக்காவின் ராணுவ உதவி , உக்ரைனுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் உதவியாக இருந்தது.
உக்ரைன் அரசுக்கும், ராணுவத்திற்கும் அனைத்து திறமையும் உள்ளது. போர்க்களத்தில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.