பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!
பே பால், நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; சென்னையில் அமைகிறது செமிகண்டக்டர் மையம்!
UPDATED : ஆக 30, 2024 10:52 AM
ADDED : ஆக 30, 2024 08:05 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன.ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், முதலீடு, வேலைவாய்ப்பு பற்றிய விவரம் வருமாறு:
* சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால் 100 பேருக்கு வேலை கிடைக்கும்.
* PAY PAL நிறுவனத்துடன் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* சென்னையில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையம் அமைகிறது. ஏ.ஐ., தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக அமைக்க applied materials நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
* செம்மஞ்சேரியில் மைக்ரோ சிப் நிறுவனம் ரூ.250 கோடியில் முதலீடு செய்ய உள்ளது. இதனால் 1500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* மதுரை எல்காட் வடபழஞ்சியில் ரூ.50 கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை இன்பின்க்ஸ் அமைக்கிறது.
* கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் ஆலை மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* செங்கல்பட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் ஓமியம் நிறுவனத்தின் உற்பத்தி மையம் அமைய உள்ளது. இதனால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* geakminds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
* சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை 8 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன.