12 நாள்,32 ஆயிரம் கி.மீ., பயணம்: பப்புவா நியூகினியாவில் போப் பிரான்சிஸ்
12 நாள்,32 ஆயிரம் கி.மீ., பயணம்: பப்புவா நியூகினியாவில் போப் பிரான்சிஸ்
UPDATED : செப் 08, 2024 03:11 AM
ADDED : செப் 08, 2024 03:02 AM

வாடிகன்: 12 நாள் வெளிநாடு பயணத்திட்டத்தின் படி நேற்று பப்புவா நியூ கினியா சென்றடைந்தார் போப் பிரான்சிஸ்.
வாடிகனின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், 87 கடந்த 2020ம் ஆண்டு மிக நீண்ட வெளிநாடுகள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதற்கான பயண திட்டத்தை வாடிகன் நிர்வாகம் தயார் செய்தது.
எதிர்பாராதவிதமாக கோவிட் தொற்று, பொது முடக்கம் காரணமாக பயணத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
2022ல் முழங்கால் வலி ஏற்பட்டது. 2023ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டது போன்ற உடல்ரீதியாக பிரச்னைகளை எதிர்கொண்டார். இதனால் அவரது வெளிநாடு பயண கனவு நிறைவேறவில்லை.
இந்நிலையில் தன் உடல் நிலை குறித்து கவலை கொள்ளாமல் 12 நாள் வெளிநாடு பயணத்தை துவக்கினார். போப் பிரான்சிஸ். அதன்படி 12 நாள் வெளிநாடு பயணத்திட்டத்தை வாடிகன் வெளியிட்டது. கடந்த 3ம் தேதி துவங்கி முதல் நாடான இந்தோனோசியா சென்றார்.
நேற்று பப்புவா நியூகினியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மூன்று நாட்கள் தங்குகிறார். தொடர்ந்து கிழக்கு தைமூர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் செல்கிறார்.